வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு. மூவர் கைது.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – தாலிக்குளம் பகுதியில், நேற்று மதியம் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியுள்ளது.

இதனால் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் நேற்று மாலை 18, 18, 24 வயதுகளையுடைய 3 இளைஞர்களை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.