இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்ய முன் கொஞ்சம் சிந்தியுங்க பாஸ்..!

அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனையாக இருப்பது திருமணம்தான். ஆனால் அந்த மாற்றம் மகிழ்ச்சியை தருமா அல்லது அதிர்ச்சியை தருமா என்பது அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் துணையை பொறுத்தது. அதற்காகத்தான் நமது சமூகத்தில் திருமணத்திற்கு முன்பே மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் ஜாதகத்தையும் மீறி மகிழ்ச்சியாக வாழும் எத்தனையோ தம்பதிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். விதிவிலக்குகள் இருக்கிறது என்பதற்காகவே ஒரு விஷயத்தை நாம் நம்பாமல் இருக்கக்கூடாது.

திருமண வாழ்க்கையை அழகாக்குவதில் ஆண், பெண் இருவருக்குமே சரிபாதி பங்கு உள்ளது. இதில் ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவரும் பாதிக்கப்படுவர். குறிப்பாக சில ராசிகளில் பிறந்த பெண்களின் அடிப்படை குணம் அவர்களுக்கும், அவர்களின் கணவர்களுக்கும் பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதற்காக அவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமல்ல, அவர்களின் எதிர்பார்ப்புகள் சில விஷயங்களில் அதிகம் இருக்கும் அவ்வளவுதான். அந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் தந்திரமானவர்கள். ஒரு கணத்தில் அவர்களது அன்பான வார்த்தைகளும் அக்கறையான செயல்களும் அவர்களை சிறந்த மனைவியாக காட்டும், ஆனால் சில தருணங்களில் அவர்களின் மனம் முற்றிலுமாக மாறி கணவர்களை படாதபாடு படுத்திவிடுவார்கள். நீங்கள் மிதுன ராசி பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாரானால் எப்படி அவர்களின் அன்பான பக்கத்தை விரும்புகிறீர்களோ அதேபோல அவர்களின் கோபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். அவ்வாறு தயாராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் திருமணம் செய்து கொள்ள மோசமான தேர்வாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவர்கள் தங்கள் கணவரிடம் இருக்கும் சிறந்த பக்கத்தை வெளியே கொண்டு வர முயல்வார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கணவர்களை பற்றிய இவர்களின் எதிர்பார்ப்புகள் எப்போதுமே அதிகமானதாக இருக்கும். அவர்கள் நிர்ணயித்த இலட்சியங்களை கணவர்கள் நிறைவேற்றாதபோது நிச்சயம் அது கணவர்களுக்கு பெரிய பிரச்சினைதான். எனவே வலிமையான ஆண்கள் மட்டும் விருச்சிக ராசி பெண்களை திருமணம் செய்ய தயாராகுங்கள்.

கன்னி
கன்னி ராசி பெண்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுக்கு எது சரி? எது தவறு? என்பது நன்றாக தெரியும். கன்னி ராசி பெண்ணுடன் நீங்கள் வாழ தயாரானால் அனைத்தையும் அவர்கள் செல்லும் வழியிலேயே ஏற்க தயாராக இருங்கள். ஆனால் மறுபுறம் நீங்கள் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் அவர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அன்பும், கவனிப்பும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதற்கு காரணமான உங்களை அவர்கள் ஆழமாக புரிந்து கொள்வார்கள். அவர்கள் கூறும் அனைத்திற்கும் ஆமாம் சொல்ல நீங்கள் தயாராக இருந்தால் நீங்கள் தாரளமாக கன்னி ராசி பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம்.

சிம்மம்
நீங்கள் ஒரு சிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அது உங்கள் அதிர்ஷ்டம்தான். ஆனால் அதிலும் ஒரு எச்சரிக்கை உள்ளது, அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் யாரோ ஒருவர் கடுமையாக பாதிக்கப்படப்போகிறார்கள் என்று அர்த்தம். அவர்களை கட்டுப்படுத்தவது என்பது மிகுந்த சிரமமான ஒன்று. எனவே சிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் முன் நன்கு யோசித்துக்கொள்ளவும். ஆனால் நீங்கள் சிம்ம ராசி பெண்ணின் இதயத்தை வென்றுவிட்டால் தன் வாழ்வின் இறுதிவரை உங்களை ஆழமாக நேசிப்பார்கள். தங்களின் அனைத்து உடைமைகளையும் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ள தயங்கமாட்டார்கள். அவர்கள் கோபப்பட்டுவிட்டால் உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுங்கள், அவர்கள் கோபம் தணியும்வரை கண்ணில் பட்டுவிடாதீர்கள்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் மிகுந்த திறமையானவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட பெண் மீது நீங்கள் உடனடியாக காதலில் விழுவதில் ஆச்சரியமில்லை. இவர்கள் திருமண உறவில் மிகவும் உண்மையாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் அதே அளவு நேர்மையை துணையிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் அவர்கள் உங்கள் வாழ்கையில் இருந்து வெளியேறவும் தயங்கமாட்டார்கள். மேஷ ராசி பெண்களை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள், பின்னர் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

தனுசு
நீங்கள் மிகவும் குழப்பமாகி, உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்க வேண்டுமென விரும்பினால் நீங்கள் தாராளமாக தனுசு ராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள் மிகவும் ஆர்வமிக்கவர்கள், சாகசங்களை விரும்புபவர்கள். எனவே அவர்களால் ஒரே இடத்தில் நீண்ட காலம் இருக்க முடியாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களை ஒருபோதும் மாற்ற முயற்சிக்காதீர்கள் ஏனெனில் உங்களால் அது எப்போதும் முடியாது. அவர்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், அவர்களுடன் மகிழ்ச்சியாய் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை போலவே மாறுவதுதான். உங்களால் அவர்களை போல மாற முடிந்தால் உங்கள் திருமண வாழ்க்கை அழகானதாக இருக்கும், ஒருவேளை முடியவில்லை என்றால் அவர்களுடனான உறவை ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்காதீர்கள்.