வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு.

வெருகல் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதியிருந்து தேடப்பட்டு வந்த குறித்த நபர் இன்று வெருகல் முட்டுச்சந்து பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வாகரை புளியங்கண்டலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தனபாலசிங்கம் கதீஸ்வரன் என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வெருகலில் உள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற வேளையில் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது