யாழில் புகையிரத்துடன் ஏற்பட்ட கொடூர விபத்து. நொறுங்கியது கார்.

கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட கார், தொடருந்துடன் மோதியதில் காரில் பயணித்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

அப்போது எதிரே வந்த தொடருந்து காரை மோதி கந்தர் மடம் அரசடி வீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ்ப்பாண நகர வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.