பெண்கள் கனவில் வந்து எந்தெந்த செயல்கள் செய்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?

கனவு என்பது நாம் அனைவரும் தினமும் காணும் ஒரு அற்புத விஷயமாகும். நம் வாழக்கையில் உள்ள பல நிறைவேறாத ஆசைகளையும், ஏக்கங்களையும் நிறைவேற்ற உதவுவது கனவுகள்தான். கனவுகள் ஏற்பட காரணம் நம் மூளைதான். இந்த பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் அதிசயமான பொருள் என்னவென்றால் அது மூளைதான். நம் மூளையில் உள்ள நினைவுகளும், எண்ணங்களுமே நமக்கு கனவுகளாக வருகிறது என்று அறிவியலார்களால் கூறப்படுகிறது. எப்பொழுதுமே நம் நிஜ வாழ்க்கையை விட கனவில் நம் வாழ்க்கை அழகானதாகவே இருக்கும்.

கனவுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒரு தொடர்பு நிச்சயம் இருக்கும். நம் கனவுகளில் வருவது நம் வாழ்வில் நடந்ததாகவோ அல்லது நடக்கப்போவதாகவோ இருக்கலாம். சிலசமயங்களில் கனவுகளில் தோன்றும் சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கப்போவதை உணர்த்தும். அந்த வகையில் கனவுகளில் பெண்கள் தோன்றுவது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அப்படி பெண்கள் கனவில் தோன்றும்போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உங்களுக்கு நடக்கப்போவதை உணர்த்தும். இந்த பதிவில் பெண்கள் கனவில் தோன்றும்போது அவை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நகை கொடுப்பது
உங்கள் கனவில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போலவோ அல்லது கையில் கொடுப்பது போலவோ வந்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.

மணமகள் அழுவது
கனவில் மணமகள் அழுவது போன்று வந்தால் அது மிகவும் மோசமான அறிகுறியாகும். இப்படி கனவு வந்தால் உங்களுக்கு சகோதர உறவுகளுடன் பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.

மனைவியை தவிர வேறு பெண்ணை கவர்வது
உங்கள் கனவில் உங்கள் மனைவி அல்லது காதலியை தவிர வேறு ஒரு பெண் உங்கள் பால் ஈர்ப்பு கொண்டால் நீங்கள் உங்கள் மரியாதையையும், கௌரவத்தையும் இழக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்கள் பூர்வீக சொத்தை இழக்கவும் நேரலாம்.

நிர்வாணமாக பெண்களை பார்ப்பது
பெரும்பாலும் பெண்கள் நிர்வாணமாக இருப்பது போன்ற கனவுகள் ஆண்களுக்கு வரலாம். சிலசமயம் நம்மை நாமே மூன்றாவது நபராக பார்க்க நேரிடலாம். எனவே உங்கள் கனவில் நீங்களே உங்களை பார்க்கும்போது, ஏதேனும் ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்க்க நேர்ந்தால், உங்கள் அதிர்ஷ்டம் அனைத்தும் உங்களை விட்டு சென்று துரதிர்ஷ்டமாக மாற போகிறது என்று அர்த்தம்.

ஆடும் மங்கை
ஒரு பெண் அரங்கத்திலோ, மேடையிலோ அல்லது சாலையிலோ ஆடுவதை கனவில் கண்டால் அது கூறவருவது என்னவென்றால் உங்கள் திருமண உறவோ அல்லது காதல் உறவோ முறிய போகிறது என்று அர்த்தம்.

பெண்ணுடன் பயணம் செய்வது
நீங்கள் உங்கள் மனைவியுடனோ அல்லது வேறு யாராவது அவர் துணையுடனோ பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக இருக்க போகிறது என்று அர்த்தம். மேலும் உங்கள் வீட்டில் விரைவில் குழந்தை செல்வம் வரப்போகிறது என்பதன் கூட அடையாளமாக இருக்கலாம்.

விளையாடும் பெண்
இது மிகவும் அதிர்ஷ்டமான கனவாகும். ஏனெனில் உங்கள் கனவில் ஒரு பெண் விளையாடுவது போல காட்சிகள் வந்தால் நீங்கள் விரைவில் பெரிய செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

பிரிந்து செல்லும் பெண்
நீங்கள் ஒரு பெண்ணுக்கோ அல்லது உங்களுக்கு ஒரு பெண்ணோ Bye சொல்லி பிரிவது போல தோன்றினால் விரைவில் உங்கள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

வெள்ளை உடையணிந்த பெண்
வெள்ளை உடையணிந்த பெண்ணை உங்கள் கனவில் பார்த்தால் மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் வெள்ளை உடையணிந்த பெண் உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அர்த்தம்.

தேவதைகள்
உங்கள் கனவில் தேவதைகளை பார்க்க நேர்ந்தால் அது உங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது எனவும் உங்களுக்கு எந்தவித தீங்கும் நேரப்போவதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள். சொல்லப்போனால் உங்கள் வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டம் இருக்கப்போகிறது என்று அர்த்தம்.