கள்ளக்காதலனுடன் உறவு. மனைவியை ‘நன்றாகச் செய்‘ என கூறி அவனிடமே ஒப்படைத்த கணவன்!!

நைஜீரியாவில் மனைவி வேறு நபருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவன், அந்த நபருடன் மனைவியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டுக்கு பணிமுடிந்து வந்த நிலையில் அவரின் மனைவி வேறு நபருடன் இருந்ததை கண்டுள்ளார்.

பின்னர் தனது நண்பர்கள் சிலரை அங்கு அழைத்த கணவன், தனது மனைவியின் காதலனிடம் பேசினார்.

அவர் கூறுகையில், என் மனைவியை நீயே அழைத்து சென்று விடு, அவளை நன்றாக கவனித்து கொள்.

ஏனெனில் வேறு நபர்கள் யாராவது அவளை அழைத்து சென்றுவிட போகிறார்கள். பிறகு என் மனம் எப்படி இப்போது துடிக்கிறதோ அதே நிலை உனக்கும் ஏற்படும் என கூறினார்.

பின்னர் அருகில் இருந்த பாதிரியாரிடம், தனது மனைவியும், அந்த நபரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ய சொன்னார்.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த நபர் அவமானத்தில் கூனி குறுகியடி இருந்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.