அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு காவலிகளால் தாக்கப்பட்ட்து.

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்தின நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதையறிந்த பருத்தித்துறை பொலிசார் மற்றும் வாள் ஏந்திய இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கு சென்று துப்பாக்கிமுனையில் மக்களை விரட்டியடித்தனர்.

மாவீரர்தினத்திற்காக கட்டப்பட்டிருந்த கொடிகளை அறுத்தெறிந்து, பொருட்களை அடித்துடைத்து காவாலித்தனத்தில் ஈடுபட்டனர். எனினும், அச்சுறுத்தலிற்கு அடிபணியாமல் மக்கள் அஞ்சலி நிகழ்வை நடத்தினர். அப்போது பொலிசார், புலனாய்வாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவரது வீடு தாக்கி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.