அள்ள அள்ள நகைகள், விலையுயர்ந்த பொருள்கள்...முற்றிலும் மர்மம் நிறைந்த கோயில்!

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வரும் இந்த கோயில் தோண்ட தோண்ட மர்ம முடிச்சுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இத்திருத்தலத்தில் பல லட்சம கோடி பெறுமதியான அள்ள அள்ள பணம். நகைகள், விலையுயர்ந்த பொருட்களும் அரசர்களின் விலைமதிப்பற்ற சொப்பனங்களை குவிந்து கிடக்கின்றன என சொல்லப்படுகின்றது.

ஒன்றல்ல இரண்டல்ல பத்துக்கும் மேற்பட்ட லட்ச கோடிகளில் மதிப்புள்ள பொருட்களும் இத்திருத்தலத்திற்குள் பல மர்மங்கள் ஒழிந்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலின் சிறப்புகளையும் இதில் ஒழிந்திருக்கும் மர்மங்களையும் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

இங்கு பள்ளிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அனந்த சயன நிலையில் தோற்றமளிப்பதால் 'ஸ்ரீ அனந்த பத்மனாபசுவாமி கோயில்' என்றழைக்கப்படுகின்றது.

இங்குள்ள இறைவனின் விக்ரகம், முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும்.

மேலும் இத்திருத்தலத்தின் கோபுரம் 100 அடி உயரத்துடன், ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது.

இந்த கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது, பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இங்கு இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவிதாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது.

இந்தக் கோயில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும்.

இங்கே காணப்பெறும் '௩௬௫' மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப்பெற்றதாகும்.

தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் 80 அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.

இத்தாழ்வாரம் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோயில் வாசலில் துவங்கி கோயிலின் கர்பக்கிரகம் வரைக்கும் நீண்டதாக காணப்படுகிறது.

கோயில் கோபுரத்தின் கீழ்த்தளம், நாடக சாலை ஆகும். இங்கே ஆண்டுதோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கோயிலின் கர்பக்கிரகத்தில் மகாவிஷ்ணு, அனந்தன் அல்லது ஆதிசேஷன் எனும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் பள்ளி கொண்டுள்ளார்.

சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 12008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும்.

நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தேர்வு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும்.

மேலும் மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி, அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

கோயிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டிருப்பதால் "ஒற்றைக்கல் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைக்கப்படும் நைவேத்யமான இரத்தின பாயாசம். மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், ஒற்றை துலா பாயாசம், பந்தரனு கலப் பாயாசம், பால் பாயாசம் ஆகிய பாயாச வகைகள் பத்மநாபசாமி கோயிலில் பிரசாதங்களாக படைக்கப்படுகின்றன.

ஆனால் இந்தக் கோயிலின் சிறப்பான நைவேத்யமாக அறியப்படும் உப்பு மாங்காய், ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்தத் தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகின்றது.

ஓணவில்லு என்று அழைக்கப்படும் இசைக்கருவி. திருவோணம் திருவிழாவின் போது ஓணவில்லு இசைத்து இறைவனுக்கு இசையர்ப்பணம் செய்வது வழக்கமாகும்.

இத்திருக்கோயிலுக்கு என்று தனிச்சிறப்பே உள்ளது. இங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதியில் உள்ள ஹனுமார் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் தீயில் கருகிய கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருவிதாங்கூர் மன்னர்களின் வம்சத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம் என்று கூறப்படுகின்றது.

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6 பாதாள ரகசிய அறைகளும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்து வந்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அறைகளிலிருந்து தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகை, பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.