எழிலனின் தந்தையார் இயற்கை மரணம்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரும், இறுதி போரில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை நேற்று கிளிநொச்சியில் காலமானார்.

இறுதி யுத்தத்தின் போது, 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் எழிலன் சரணடைந்திருந்தார்.

அப்போது சரணடைந்தவர்கள் பற்றிய எந்த விபரத்தையும் அரசு வெளியிடவில்லை. மாறாக, யாருமே சரணடையவில்லையென்றே கூறி வருகிறது.

எழிலனின் மனைவியான, ஈழத்தமிழர் சுயாட்சி கழக பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும், சரணடைந்தவர்கள் பற்றிய எந்த தகவலையும் அரசு வெளியிடவில்லை.

இராணுவத்திடம் சரணடைந்த தனது மகனின் நிலைமை என்னவென்பதை அறியாமலேயே, எழிலனின் தந்தையார் இன்று இயற்கை எய்தினார்.
close