கொழும்பிலிருந்து பயணித்த பஸ் பாரிய விபத்து!

கொழும்பிலிருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இன்று அதிகாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து திருகோணமலை, கல்லோயா பகுதிக்கும் அக்போபுர பகுதிக்கும் இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து, எருமை மாடொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதன் பின்னர் அந்த பேருந்து குடை சாய்ந்துள்ளது. எனினும் உயிர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை எனவும், 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.