சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு தமிழ் விவசாயி பலி!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான சிங்களவர்களின் சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாயினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் 14.11.18 அன்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.

13.11.18 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி நாயடிச்ச முறிப்பு வயல்வெளியில் வயல் செய்த விவசாயியான 42 அகவையுடைய கனகையா உதயகுமார் வயல் காவலுக்காக சென்றுள்ளர்.

14.11.18 இரவு வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடியுள்ளதுடன் முல்லைத்தீவு பொலீஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடும் செய்துள்ளார்கள்.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரால் ராஜகுரு அவர்களின் பணிப்பின் பெயரில் 59-3இராணுவத்தினர் குறித்தகாட்டுப்பகுதிக்கு சென்று சோதனை செய்து உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோ குடியேற்ற வாசிகளான சிங்கள இனத்தவர்கள் குறித்த வயல் காணிப்பகுதியில் சட்டவிரோத கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள் இதில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இன்னிலையில் உடலத்தை பொலீசார் மரணவிசாரண அதிகாரி முன்னிலையில் மீட்டு பிரத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைத்துள்ளார்கள்.