நிறுத்தி வைத்த பேருந்து இரவோடு இரவாக தீக்கிரை

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பேருந்தின் உரிமையாளர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான பயணிகள் சேவையை மேற்கொண்டுவிட்டு இரவுவேளை வழமையாக பேருந்து நிறுத்தும் இடமான தனது வீட்டுக்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளார்.

ஆனாலும் இரவு 11.30 மணியளவில் வீட்டில் நாய்கள் கடுமையாக குரைத்தபோது கண்ணாடிகள் வெடித்து பறக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக வெளியில் வந்து பார்த்தபோது தனது பேருந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருபதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களது உதவியுடன் முடிந்தவரை தீயை அணைக்க முயற்ச்சித்தும் சுமார் பதினெட்டு இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு பேருந்து விசமிகளால் எரியூட்டப்பட்டதா அல்லது மின்னொழுக்கு காரணமாக தீப்பிடித்ததா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

குறித்த இடத்தில் கிளிநொச்சி தடயவியல் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.