Trending News...

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாகப் பலி!

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் யானை தாக்கிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த வயோதிபர் மஹாதிவுல்வெவ, தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் ஏ.எச்.ஏ.சோமசந்திர (60 வயது) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றிருந்த நிலையில்ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு சக நண்பர்களுடன் வருகை தந்து கொண்டிருந்த வேளை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.