வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் தற்கொலை.

வவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் 2ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மதுசா பேராதனை யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யக்கா பாலத்திற்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.