மிளகாய் தூள் காமினிக்கும் யாழ் நூலகத்துக்கு என்ன தொடர்பு தெரியுமா..?

1981 இல் தனது தொகுதியிலிருந்து சிங்கள இளைஞரகளை புகையிரதம் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்நூலகத்தை கொழுத்தவும் அதன் பின்னரான யாழ் நகர சூறையாடலிற்கும் என ஐதேக கட்சிக்கு ஓடாக உழைத்த காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பலராலும் உன்னதமான அகிம்சாவாதி என புகழப்படுபவர் அவர் மீது மிளகாய் பொடி தண்ணீரை தெளித்து அவர் கண்ணில் இருந்து கண்ணீரை வரவழைத்த ஜனநாயக விரோதிகளை பலரும் கண்டிக்கின்றனர் அது நல்லது ஆனால் கடவுள் ஒருவன் இருக்கிறான் அதை எந்ந ஜனநாயக வாதியும் மறந்து விட முடியாது.

அதற்கு சிறந்த நிவாரனியான தண்ணியை குடிக்கவும் இது உடலிற்கும் மனதிற்கும் நல்லது. மிளகாய் தூள் காரமும் உங்களிற்கு தாங்க முடியாமல் போகலாம்…

ஆசியாவின் பெரிய நுாலகமாக விளங்கிய யாழ் நுாலக எரிப்பை முன்னின்று நடத்தியவர், காமினி திசநாயக்க (மலையகம்).

அதுக்கு ஆள் பிடிச்சு அனுப்பிய அள்ளக்கையே காமினி ஜயவிக்கிரம பெரேரா( குருநாகல் தொகுதி)

இன்று காமினி ஜயவிக்கிரம பெரேரா அமைதியான நல்லவராக தெரிந்தாலும் இவரைப்பற்றிய பழைய வரலாற்றை பல தமிழ் தலைவர்கள் மறந்திருக்கலாம் காரணம் இன்று யார் துரோகி யார் நல்லவர் என தெரியாது பழகும் காலம்.