தந்தைக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் இறுதிக்கிரிகை!!

 
வவுனியா , கற்குளம் கிராமத்தில் தந்தைக்கும் மகளுக்கும் ஒரேநேரத்தில் இறுதிக்கிரிகை நடைபெற்றுவரும் நிலையில் இந்த இறப்புக்களின் பின்னணி பலரை சோக மயமாக்கியுள்ளது.

கடந்த 11-11-2018 அன்று தந்தையான கந்தசாமி செல்வநாயகம் அவர்கள் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததை தொடந்து தந்தையின் மரணச்செய்தியை கேள்வியுற்ற 21 வயதான பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுவரும் செல்வநாயகம் மதுஸ்ஷா (கடைசி மகள்) 12-11-2018 அன்று கண்டியில் புகையிரதத்துக்கு முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தகப்பனான செல்வநாயகத்தின் கடைசி மகளான மதுஸ்ஷா தந்தையில் அளவுக்கதிகமான பாசம் வைத்திள்ளதுடன் தந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில் தனது தந்தையின் உயிர்பிரிந்தால் தனது கண்ணிலிருந்து கண்ணீர் வருவதற்குமுன் தன் உயிர்போகுமென சுற்றத்தாரிடம் கூறிவந்துள்ளார்.

அதேபோன்று தனது தந்தை இறந்தவுடன் தனது உயிரை மாய்த்துள்ளார்.

மூன்று பெண்பிள்ளும் ஒரு ஆண் மகனையும் கொண்ட செல்வநாயகத்தின் குடும்பத்தில் மூத்த மகள் திருமணமாகியுள்ளதுடன் ஒரே ஒரு ஆண்மகனும் மத்தியகிழக்கு நாடொன்றில் சிறையில் தண்டணை கைதியாக இருப்பதனால் தந்தைக்கான இறுதிக்கடைமைகளில் கலந்துகொள்ள முடியாமல் போனமை குடும்பத்தாரை மேலும் துயரடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி.
வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் தற்கொலை