மட்டனுக்காக மகளை கொலை செய்த கொடூர தந்தை.

பீகாரில் மட்டன் குழம்பு ரெடியாக தாமதமானதால் தந்தை தனது 4 வயது மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பகிர்டோலி கிராமத்தைச் சேர்ந்வர் சாம்பு லால் சர்மா (40). கூலித் தொழிலாளியான இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகள் பகிர்டோலி உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று விடுமுறையில் தனது வீட்டிற்கு சென்ற சர்மா, மட்டன் எடுத்து வந்து தனது மனைவியிடம் கொடுத்து அதனை சமைக்கும் படி கூறினார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார்.

சற்று நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய அவர், மனைவியிடம் மட்டன் சமைத்தாயா என கேட்டுள்ளார். வேலை அதிகமாக இருந்ததால் செய்யவில்லை என்றும் சற்று நேரத்தில் சமைத்து தருவதாகவும் அவரது மனைவி கூறினார்.

இதனால் டென்ஷனான சர்மா, வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது 4 வயது மகள் அவரிடம் சேட்டை செய்துள்ளார். ஏற்கனவே மட்டன் செய்யவில்லை என்ற கடுப்பில் இந்த சர்மா குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.