மாகாண சபைக்குள் படங்கள் பார்த்த வயதான உறுப்பினர்.

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதுதொடர்பான ஒளிப்படங்களை ஊடகவியலாளர்கள் எடுத்துள்ளனர்.

பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வ கணினி உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கணினிகளிலேயே, வயதான மாகாண சபை உறுப்பினர்கள்கூட, படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.