Trending News...

யாழில் பெண் ஒருவர் செய்த செயல். விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக நாவற்குழியை சேர்ந்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பல ஆயிரம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகவே நாவற்குளியைச் சேர்ந்த 30 வயதுப் பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

சாவகச்சேரிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நாவற்குளி ஐயனார் கோவிலடி வீடொன்றில் சோதனை நடத்தியபோது ஒரு கிராம் 550 மில்லிகிராம் போதைப் பொருள்கள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.