இறந்த பெண்ணின் உடலை கடித்து தின்ற பூனை. அதிர்ச்சி புகைப்படம்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை தின்ற சம்பவம் அங்கிருந்த நோயளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் யார்? அவரின் உறவினர்கள் யார் என்பது குறித்து தெரியாத காரணத்தினால், அந்த பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருக்கும் வார்டில் தனியாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் வார்டில் அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்த பூனை ஒன்று, கவனிப்பார் இன்றி கிடந்த இந்த பெண்ணின் உடலை பார்த்த பின்பு கடித்து தின்றது.

இதைக் கண்ட அங்கிருந்த நபர்கள் உடனடியாக பூனையை வேகமாக விரட்டியுள்ளனர்.

அதன் பின் இது குறித்த தகவல் அங்கிருக்கும் மருத்துவ உழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட போதும், இறந்த பெண்ணின் உடல் அகற்றப்படாமல் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.


இதனால் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்களிடம் பிற நோயாளிகளின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த உடலை அகற்ற வேண்டும். பூனைகளை மருத்துவமனையிலிருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்து தின்ற சம்பவம் அங்கிருக்கும் பிற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.