நீதிமன்றிற்கு அருகில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது.

யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே இவ்வாறு சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு தனது அண்ணனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி தனக்கு உடல் நிலை ஆரோக்கியமற்று காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த அவரது அண்ணனும் குறித்த வீட்டிற்கு வந்து ஜெபர்சனுடன் இரவு 10.00 மணிவரை இருந்து, பின் தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என மேலும் தெரியவருகிறது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.