பயனர்களின் பாஸ்வேர்டை தவறுதலாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம்: அதிர்ச்சியில் பயனர்கள்

புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் உலகின் பிரம்மாண்டமான தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்ட இந் நிறுவனமானது அண்மையில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய காரியம் ஒன்றினை செய்துள்ளது.

அதாவது பயனர்கள் சிலரின் கடவுச் சொற்களை தவறுதலாக காண்பித்துள்ளது.

தரவுகளை தரவிறக்கம் செய்வதற்காக தரப்பட்டுள்ள டூலில் இக் கடவுச் சொற்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பாதுகாப்பு குறைபாடு காணப்பட்டமையே காரணம் என அந்நிறுவனத்தில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் சட்ட வல்லுனர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள General Data Protection Regulation (GDPR) அடிப்படையில் பயனர்கள் தமது தரவுகளை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதியை அளிக்க வேண்டும்.

இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் விசேட டூல் ஒன்றினை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்த டூலிலேயே கடவுச்சொற்களும் காண்பிக்கப்பட்டுள்ளன.

இக் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.