மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதிய கார். ஒருவர் பலி.

அனுராதபுரம் திறப்பனை பிரதான விதியில் திறப்பனைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் வான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் அவுகன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளார்.

மேற்படி வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்தவரே மரணமடைந்துள்ளார்.

மேற்படி நபர் சென்ற வாகனம் மணிக் கூண்டுக் கோபுரம் ஒன்றின் மீது மோதியதில் சாரதியும் மேற்படி நபரும் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவரான முன் ஆசனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திரப்பனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.