பூங்காவில் இளம்பெண்ணை கடித்து கொன்ற புலி: சோக சம்பவம்

இங்கிலாந்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் பணியாற்றி வந்த பெண்ணை, மலேசியன் புலி கடித்து கொன்றுள்ள சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஹேமர்டன் வனவிலங்குகள் பூங்காவில், கடந்த ஆண்டு மே 29ம் தேதியன்று, ரோசா கிங் என்ற 33 வயதான பெண், 8 வயதான மலேசியன் புலியால் கடித்து கொடூரமாக கொல்லப்பட்டார்.

அவரது உடல் முழுவதும் அச்சுறுத்தும் காயங்களால் நிறைந்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அது ஒரு "அசாதாரண விபத்து" என்று பூங்கா நிர்வாக அதிகாரிகள் விவரித்தனர்.

ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகும் கூட சம்மந்தப்பட்ட விலங்கு பொதுமக்களின் பார்வைக்காக பூங்காவில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோசாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விலங்குகளை கையாள்வதில் திறமை மிகுந்த தன்னுடைய கொல்லப்பட்டிருப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணையானது, பூங்கா நிர்வாக அதிகாரிகள் மற்றும் ரோசாவின் பெற்றோர் முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி, அடுத்தாண்டு ஜூலை 1ம் தேதி துவங்கி 12ம் தேதிக்குள் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நடைபெறும். அதற்குள் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கூறி உத்தரவிட்டார்.