அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. மஹிந்த அரசு அதிரடி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அதிகாரம் மூலம் பாராளுமன்றத்தை கலைத்து உள்ளார்.

எனினும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அடுத்த பொது தேர்தல் முடியும் வரை இடைக்கால அமைச்சரவையாக கடமையில் இருக்கும்.

இதற்கு அமைய இலங்கை போக்குவரத்து அமைச்சு போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அறிவித்துள்ளது.

அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலின் படி , சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதுவரை காலமும் 14250 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பளம் 25550 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இவ்வாறு பல அதிரடியான திட்டங்களை அறிவிக்கும் என்னும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.