உலகம் முழுவதும் உள்ளாடை போராட்டம் நடத்தும் பெண்கள்! ஏன் தெரியுமா?


சமீப நாட்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் பலரும் தங்களுடைய உள்ளாடையை இணையத்தில் பதிவிட்டு #ThisIsNotConsent என்ற ஹாஸ்டேக் மூலம் தங்களுடைய கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

அயர்லாந்தில் 17 வயது இளம்பெண்ணை 27 வயது இளைஞர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கு ஒன்று கடந்த 6ம் தேதியன்று கார்க் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கினை எட்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சுமத்தப்பட்ட இளைஞருக்காக வாதாடிய வழக்கறிஞர், இளம்பெண்ணின் உள்ளாடையை நீதிமன்றத்தில் காண்பித்து அவளுடைய ஆடையே துஸ்பிரயோகத்திற்கு தூண்டியுள்ளது என வாதிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளை கேட்ட நீதிபதி, இருவரின் சம்மதத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக கூறி குற்றவாளியை விடுவித்து உத்தரவிட்டனர்.

அயர்லாந்து முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, பெண்கள் பலரும் கையில் உள்ளாடையுடன் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

வடக்கு அயர்லாந்தில் டப்ளின், கார்க் மற்றும் பெல்காஃபா நகரங்களிலும் பெண்கள், "இது சம்மந்தமற்றது" என்ற சொற்களால் நிரம்பியிருக்கும் பாதைகளை ஏந்தியவாறு கையில் உள்ளாடையுடன் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக உலகின் பல பகுதிகளில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், #ThisIsNotConsent என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களுடைய உள்ளாடையின் புகைப்படத்தை பதிவிட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.