யாழில் புகையிரதத்தில் மோதுண்டு நொறுங்கியது கார் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…. புகைப்படங்கள் உள்ளே..!

அரியாலை, நெளுக்குளம் தொடருந்துப் பாதையில் பயணித்த கார், கடுகதி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குளிரூட்டப்ட்ட கடுகதி தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.

காரை கராஜூக்கு கொண்டு சென்றுவிட்டு திரும்புகையிலேயே குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெகநாதன் (வயது-40) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடருந்துடன் மோதுண்ட கார் சுமார் நூறு மீற்றர்கள்வரை இழுத்து செல்லப்பட்டது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.