தமிழர்களின் கண்ணீர் துடைக்க களமிறங்கிய வெள்ளைக்காரன்!


தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் தென்னை, தேக்கு, செம்மரம், நாட்டு மரங்களான வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீதும் விழுந்தன.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவர், கஜா புயல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள தகவலை தன் நண்பர் மூலமாக அறிந்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை போக்க , மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் அதற்குத் தேவையான பொருள்களை கையோடு வாங்கிக் கொண்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்றுள்ளார்.

அங்கு, புயலால் கீழே விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு தொடர்ந்து செய்தும் வருகிறார்.

வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டர் மக்கள் படும் துயரத்தைப் பார்த்து கண் கலங்கியதோடு வேகமாக புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதையடுத்து இந்த வெள்ளைக்காரன் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.