இரு வேறு இடங்களில் பறக்க விடப்பட்ட புலிக்கொடி!!

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் புலிக்கொடி ஒன்று இன்ற காணப்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்த புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த இடத்திற்கு சென்று புலிக்கொடியினை மீட்டுள்ளார்கள்.
மக்களை குழப்பும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை,மாவீரர் நினைவு தினம் புலிகளின் சின்னங்களை காட்சிப்படுத்த சட்டத்தினூடாக தடுத்தாலும் எங்கள் உணர்வுகளை கட்டிப்போட முடியாது என தெரியப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி கட்டப்பட்டிருந்தது.