பெற்ற மகளை கற்பழித்த தந்தை – மேடையில் கண்ணீர் விட்டு கதறிய மகள்..!

கல்லூரியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பி.யூ. கல்லூரி மாணவி தன்னை தனது தந்தையே கற்பழித்தது குறித்து கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு சக மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி தாலுகா நெல்லியாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(வயது 45). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 17 வயது நிரம்பிய அவருடைய மகள் மங்களூரு அருகே உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் கல்லூரிக்கு சென்றுவர வசதியாக அவர் விடுதியிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் ராஜுவின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது மகன்களையும், மகளையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜுவின் மகள் விடுதியில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்றாள். அப்போது ராஜு, தனது மகளை கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். மேலும் வீட்டில் இருந்து அவர் விடுதிக்கு திரும்பினார்.

பின்னர் கல்லூரியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜுவின் மகள் பேசினார். அப்போது அவர் திடீரென தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதைக்கேட்டு அங்கிருந்த சக மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இதுபற்றி பெண்கள் அமைப்பு மூலம் உப்பினங்கடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.