Trending News...

யாழில் மது போதையால் இடம்பெற்ற விபத்து. தப்பி ஓட முயன்றவர்களிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

மருதனார்மடம் பால் பண்ணைக்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையில் குறித்த முதியவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது அவ்வழியால் அதி வேகமாக வந்த உந்துருளியொன்று அவரை பலமாக மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் இரு இளைஞர்கள் கடும் மதுபோதையில் வந்ததாகவும் அவர்கள் தப்பிச் செல்லமுற்பட்டபோது விசேட அதிரடிப் படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.