திருமணமானதும் தாலியை கழற்றி வீசி ஆட்டோவில் சென்ற பெண்.

தமிழகத்தில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலே மணப் பெண் தாலியை கழற்றி வீசி ஆட்டோவில் ஓடியதால், மாப்பிள்ளை அப்போதே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் அருகே செக்கானூரணியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் கோட்டையூரை சேர்ந்த அருணா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும் குறித்த தினத்தில் திருமணம் நடைபெற்றது. செல்வகுமார், அருணாவுக்கு தாலி கட்டினார்.

திருமணம் ஒரு இடத்திலும் ரிசப்ஷன் ஒரு இடத்திலும் நடந்ததால், திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்த பெரியோர்கள் ரிசப்சனுக்காக அந்த மண்டத்திற்கு சென்றுள்ளனர்.

மணமக்களும் அந்த மண்டபத்திற்கு செல்ல வேறொரு காரில் புறப்பட்டு சென்றனர்.

மண்டபத்தை நோக்கி கார் சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று மணப்பெண்ணான அருணா காரை நிறுத்தும் படி கூறிவிட்டு தாலியை கழற்றி வீசி, எதிரே வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றார்.

என்ன நடக்கிறது என்று மாப்பிள்ளை விட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் தெரியாததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளனர்.

அப்போது செல்வகுமார் ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணத்துக்கு பேசினார்கள். அவர் சம்மதம் சொன்னதையடுத்து, அதே மண்டபத்தில் செல்வகுமார் அந்த திடீர் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார்.

தாலி கட்டிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதை கழட்டி வீசி எறிந்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஓட்டம் பிடித்த பெண்ணால் அங்கு பரபரப்பு நிலவியது.