சிறுமிகளை பலாத்காரம் செய்த பிக்குவிற்கு 12 வருட சிறை. | பிரான்ஸ்.

சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட புத்த துறவி ஒருவருக்கு 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இத்தண்டனை Saône-et-Loire நகர நீதிமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விதிக்கப்பட்டுள்ளது. Karma Tshojay எனும் 56 வயதுடைய குறித்த புத்த துறவி 1990 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டுக்குள் நான்கு இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதோடு, அவர்களை பலாத்காரமும் செய்துள்ளார். 11 இல் இருந்து 13 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 27 ஆம் திகதி, 2012 ஆம் ஆண்டு Karma Tshojay அடையாளம் காணப்பட்டார். அப்பொழுது முதல் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது.