13 வயது பாடசாலை மாணவன் சீருடையுடன் தூக்கில்...

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த காட்டுப்பகுதியில், 13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன், பாடசாலை சீரூடையுடன் தூக்கில்தொங்கிய நிலையில் நேற்று இரவு உடலமாக காணப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாரை தொடர்பு கொண்டுகேட்டபோது, மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தகவல்கிடைத்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரியுடன் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் விசாரணைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல தகவல்களை பெற Jaffnabbc.com உடன் இணைந்திருங்கள்.