திருமண ஆசைகாட்டி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.

தமிழகத்தில் 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் ஆன இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், வெள்ளிவலசு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா (13). இவர் கடந்த 22-ஆம் திகதி இரவு வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

இதனால் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடிய போதும் கிடைக்காததால், அரச்சலூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் சிறுமியைக் கண்டுபிடிக்க, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு பொலிசார் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போது, சிறுமி திருப்பூர் பகுதியில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிப்படை பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அப்போது சிறுமி வர்ஷாவுடன், அவரை அழைத்துச் சென்ற விக்னேஷ் (19 ) மற்றும் அவருடைய கூட்டாளிகளான ராஜபூபதி (18), ரமேஷ் (22) ஆகியோர் வசமாக சிக்கியுள்ளனர்.

இதையடுத்து சிறுமி மற்றும் அவருடன் இருந்த மூன்று இளைஞர்களையும் தனிப்படை பொலிசார் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இளைஞர் விக்னேஷ் என்பவர், திண்டல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும், அப்போது அதே வேனில் பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி வர்ஷாவுடன், இளைஞர் விக்னேஷூக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

மேலும் விக்னேஷ் வர்ஷாவிடம் அவ்வப்போது ஆசைவார்த்தை பேசி வந்த அவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வர்ஷாவை வீட்டை விட்டு ஓடி வரும் படி கூறியிருக்கிறார்.

இதனால் அந்த சிறுமியும் விக்னேஷ் பேச்சை கேட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னரே தன்னுடைய நண்பர்களின் உதவியால் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற இளைஞர் விக்னேஷ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

சிறுமியைச் சீரழித்த இளைஞர் விக்னேஷூக்கு திருமணமாகி கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. அதனை மறைத்து ஏமாற்றி சிறுமியிடம் பழகியிருக்கிறார் என்பது தான் அதிர்ச்சி செய்தி, தன் மகளைப் போன்று பார்க்க வேண்டியை சிறுமியை விக்னேஷ் இப்படி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் விக்னேஷ் மீது ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிறுமியைக் கடத்துவதற்கு உதவியாக இருந்த விக்னேஷின் கூட்டாளிகளான ராஜபூபபதி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.