14 வயது சிறுமியை பலியெடுத்தது தனியார் பேருந்து!!

14 வயது பாடசாலை மாணவி ஒருவர் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஊருபொக்க கின்னலிய பாடசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேரூந்து மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் 1.30  மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கின்னலிய பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவரின் தாய் மற்றும் தந்தை எம்பிலிப்பிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து ஊருபொக்க வரை பயணித்த பேரூந்து வீதியின் மறுபக்கத்தில் அதிக வேகத்தில் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.