17 வயது மாணவன் புகையிரதத்தில் மோதி பலி.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுகுட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 2.05 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

கதுருவெல, கல்லேல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மீர் என்ற 17 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் நேற்று நள்ளிரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஆதம் லெப்பே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது