படுக்கைக்கு அடியில் 19 அடி நீள ராஜ நாகம். பின்னர் நடந்தது?

இந்தியாவில் 19 அடி நீள ராஜ நாகம் வீட்டின் படுக்கைக்கு அடியில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பலிபால் கிராமத்தை சேர்ந்தவர் ருஹியா சிங். இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு உறங்குவதற்காக படுக்கையறைக்கு சென்றார்.

அப்போது படுக்கைக்கு அடியில் ராஜ நாகம் இருப்பதை கண்டு சிங்கும் அவர் குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு போன் செய்து விவரத்தை கூறியும் அவர்கள் உடனடியாக வரவில்லை.

இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான கிருஷ்ணா என்பவர் சிங் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் ராஜநாகத்தை லாவகமாக பிடித்த அவர் காட்டுக்குள் விட்டார். இது குறித்து கிருஷ்ணா கூறுகையில், பாம்பானது 19 அடியில் மிக பெரிதாக இருந்தது.

எனக்கே அதை பார்க்கும் போது பயமாக இருந்தது. என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ராஜ நாகத்தை நான் இதுவரை பிடித்ததில்லை.

அதை பிடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. சிங்கின் குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள் நான் வருவதற்கு தாமதமாகியிருந்தால், ராஜ நாகத்தை கொல்ல முடிவு செய்திருந்தார்கள் என கூறியுள்ளார்.