2018 ஆம் ஆண்டில் மக்களை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.

2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய மக்களால் கவனம் ஈர்க்கப்பட்ட நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பு

ஜப்பானின் நோசாவாஓன்சென் பகுதியில் நடைபெற்ற டோசோஜின் தீ திருவிழாவின்போது மக்கள் தீயினை பற்றவைத்து விழாவை கொண்டாடுகிறார்கள்.
லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் கடும் பனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்.

அயர்லாந்தில் நடைபெற்ற கருக்கலைப்பு தொடர்பான பொதுவாக்கெடுப்பில் கருக்கலைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதைக் கொண்டாடும் பெண்கள்.

1050-53 கொரிய போருக்குப் பிறகு சுமார் 65 ஆண்டுகள் கழித்து வட கொரியாவில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்கு தென் கொரிய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, 92 வயதான மூதாட்டி அவரது மகனைப் பார்த்து கட்டி அணைத்து அழுகிறார்.

மியான்மர் ராணுவத்தினர் அந்நாட்டின் இஸ்லாமியர் சிறுபான்மையினர் மீது தொடுத்த வன்முறையின் காரணமாக சுமார் 7 லட்சம் பேர் பங்களாதேஷ்க்குள் தஞ்சம் புகுந்தனர். ரோஹிங்கியா மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலின் ஓராண்டை நினைவுகூறும் வகையில் பங்களாதேஷில் இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தோனேசியாவில் பாலு பகுதியில் சுனாமியிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட மீதமிருக்கும் கட்டடங்கள்.

இந்தோனேசியாவின் பாலு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

முதல் உலகப் போர் நிறுத்தப்பட்டதன் நூற்றாண்டை நினைவு கூறும் விதமாக, லண்டன் நகரத்திலுள்ள கட்டடத்தில் இருந்த அனைவரும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம். நகரும் படிக்கட்டுகளில் நின்றவர்கள், உள்ளிட்ட அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.