தங்கையின் குழந்தைக்கு அப்பாவான 20 வயது அண்ணன்.

புனே மாவட்டத்தில் தனது தங்கையை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

17 வயது தங்கையை 20 வயது அண்ணன் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால், அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வீட்டிற்குள் நடந்த இப்படியொரு சம்பவத்தை பெற்றோரும் வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளனர். இந்நிலையில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவின்போது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்ததையடுத்து, அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், குற்றவாளியாக கூறப்படும் அண்ணனுக்கு சிறுநீரக பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்டவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இப்படியொரு சம்பவத்தை மறைத்த பெற்றோரை நீதிபதி கண்டித்துள்ளார்.