மீனவர்களுக்கு எச்சரிக்கை. 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளி?

இலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களை கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இங்கு அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் இருப்பதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் பொத்துவில் முதல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரை கடலுக்கு அப்பால் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும்

குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் கரைக்கு திரும்புமாறு அந்த நிலையம் தெரிவித்துள்ளது.