24 மணித்தியாலத்தில் ஐவர் மரணம். யாழ்ப்பாணத்திலும் ஒருவர் மரணம்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிந்தவர்களில்14 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், ஊருபொக்க, அங்குனுகொலபெலஸ்ஸ, ஹபரண ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் 66 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹபரண பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில், 54 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.