மஞ்சள் ஆடை போராட்டம். 2891 பேர் காயம்! - 9 பேர் பலி!!

மஞ்சள் ஆடை போராட்டத்தில் இதுவரை 2891 பேர் காயம்! - 9 பேர் பலி!! ஆறாவது வார போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இடம்பெற்ற மஞ்சள் மேலாடை போராட்டத்தில் 2,891 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 ஆம் திகதி மஞ்சள் மேலாடை போராட்டத்தின் முதலாம் வார ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, வன்முறைகளும் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. 1,843 பொதுமக்கள் (ஆர்பாட்டக்காரர்களுடன் சேர்த்து) இதுவரை காயமடைந்துள்ளனர்.

அதேவேளை 1,048 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். தவிர, மஞ்சள் மேலாடை போராளிகள் விபத்தில் அல்லது வன்முறைகளுக்கு உள்ளாகி இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.