3 பேரை காதலித்த மனைவி கண்டுபிடித்த கணவன்.. நேர்ந்த விபரீதம்.

இந்தியாவில் மூன்று காதலர்களுடன் சேர்ந்து கணவரை தற்கொலை செய்ய வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் பிரகலாத். இவர் மனைவி தன்பாய் மகேஷ்வரி.

இந்நிலையில் பிரகலாத் சில தினங்களுக்கு முன்னர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பிரகலாத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர் லால்ஜி பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்தி விசாரணையில் பிரகலாத்தின் மனைவி மகேஷ்வரிக்கு நர்ஷின், சங்கர், மகேஷ் ஆகிய மூன்று பேருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையறிந்த பிரகலாத் மனைவியை கண்டித்தார். ஆனால் தனது மூன்று காதலர்களுடனான தொடர்பை அவர் தொடர்ந்தார்.

மேலும் நான்கு பேரும் சேர்ந்து பிரகலாத்தை மிரட்டியதுடன், துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக மனமுடைந்த பிரகலாத் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மகேஷ்வரி, நஷ்ரின், சங்கர், மகேஷ் ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.