மதத்தின் பெயரால் 300 பெண்களை துஷ்பிரயோகம். சொந்த மகளையும் விட்டு வைக்காத கொடுமை!!

தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர், தனது சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

பிரேஸிலைச் சேர்ந்த Joao Teixeira de Faria (76) என்பவர் தான் பிரச்சினைகளையும் நோய்களையும் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார்.

மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிப்பதாகக் கூறி தங்களை Joao பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக 10 பெண்கள் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்ததைத் தொடர்ந்து, 300 பெண்கள் அவர் மீது புகாரளிக்க முன்வந்தனர். சனிக்கிழமை 3 மணிக்குள் சரணடையுமாறு பொலிசார் அவருக்கு கெடு விதித்திருந்த நிலையில், நேற்று அவர் பொலிசாரிடம் சரணடைந்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சையளித்துள்ள Joao, தன்னிடம் சிகிச்சைபெற வரும் பெண்கள் ஏராளமானோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அவர்களில் Joaoவின் மகளான Teixeiraவும் ஒருவர். குணமாக்குவதாகக் கூறி தனது தந்தை தன்னை 10 வயது முதல் 14 வயது வரை துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார் Teixeira.

அவரிடம் வேலை செய்த ஒருவரால் தான் கர்ப்பமாக்கப்பட்டபின்தான், தன்னை துஷ்பிரயோகம் செய்வதை தன் தந்தை நிறுத்தியதாக தெரிவிக்கும் Teixeira, பின்னர் தன்னை அவர் அடித்ததில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

டாக் ஷோ புகழ் ஓப்ரா வின்ஃப்ரே, ஒரு முறை Joaoவை பேட்டியெடுக்கச் சென்றதாகவும், அப்போது மயக்கமருந்து கொடுக்காமலே ஒரு பெண்ணின் மார்பகத்தை அவர் வெட்டி எடுத்ததைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் பல பிரபலங்களும் முன் வந்து தாங்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகாரளிக்க, பொலிசாரிடம் சிக்கியிருக்கிறார் Joao. ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தபின் அவருக்கு வைரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் பரிசாக அளிப்பது Joaoவின் வழக்கமாம்.