அதிரவைத்த கொடூர சம்பவம்: 32 வருடங்களுக்கு பின் வெளியான உண்மை.

பிரித்தானியாவில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையுண்ட வழக்கில் 32 வருடங்களுக்கு பிறகு பொலிஸார் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியிலுள்ள பூங்கா அருகே 1986ம் ஆண்டு அக்டோபர் மாதம், நிகோலா பெல்லோஸ் மற்றும் கரேன் ஹேடேவே என்ற 9 வயதுடைய இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

அவர்களுடைய உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சிறுமிகள் இருவரும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ரஸ்ஸல் பிஷப், விசாரணைக்கு பின்னர் 1987ம் ஆண்டு விடுதலையானார்.

இந்த சம்பவமானது பிரித்தானிய முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது.

அடுத்த மூன்று வருடத்திலே 1990 ம் ஆண்டு 7 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் ரஸ்ஸல் பிஷப் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இதற்கிடையில் குற்றவாளியின் டிஎன்ஏ ஆய்வுகளை வைத்து பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் 32 வருடங்களுக்கு முன்பு இறந்த சிறுமிகளின் விசாரணையோடு ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் பொலிஸார் விசாரணையில் குற்றவாளி, தான் அந்த சிறுமிகளை தொட்டது கூட கிடையாது என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தான்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, 32 வருடங்களுக்கு முன்பு இறந்த சிறுமிகளின் வழக்கில் ரஸ்ஸல் பிஷப் தான் குற்றவாளி என கூறி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிக்கான தண்டனை விவரம் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு வந்த மறுநிமிடமே கொலை செய்யப்பட்ட இருசிறுமிகளின் பெற்றோர்களும் நீதிமன்றத்திலே கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தனர்.

ரஸ்ஸல் ஏற்கனவே செய்த கொலைக்காக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும்நிலையில், தற்போது மீண்டும் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளதால் சாகும்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றாவளி ரஸ்ஸல், சிறுமி நிக்கோலா தந்தையின் நெருக்கமான நண்பர் ஆவார். கொலை செய்யப்பட்ட அன்று, ரஸ்ஸலும் குற்றவாளியை தேடுவது போல அங்கு அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.