யாழில் 500 ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸ். கடை உரிமையாளர் முறைப்பாடு

500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிங்கள பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகை கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸார் தன்னை மிரட்டி லஞ்சம் பெற்றதாக முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுபவர் என்று கூறி நகை கடைக்குச் சென்று கடை உரிமையாளரிடம் கஞ்சா வியாபாரம் செய்வதாகவும், அதனால் பணம் தர வேண்டும் என கூறி 500 ரூபாய் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காசு வாங்கிக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் சென்ற பின்னர் கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.