5000 ரூபாவிற்கு விபசாரத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவி!!

கொள்ளுபிட்டி கிளிபர்ட் மாவத்தை நீணடகாலமாக இயங்கிவந்த விபசார விடுதி ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டி காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியுடன் குறித்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதிக்காக பயன்படுத்தப்பட்ட கட்டிடம் மாதாந்தம் 10 இலட்சம் ரூபாவிற்கு சீன நாட்டு பெண் ஒருவரால் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் வியட்நாம் யுவதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிகள் இருவரும் 5 ஆயிரம் ரூபாவிற்கு விபசாரத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.