கனடா விசா மோசடி. ஏமாறும் மக்கள். தயவுசெய்து பகிருங்கள்.

இதை வாசித்த பின்னர் தயவு செய்து பகிருங்கள்… நீங்கள் சிந்தித்து வாசித்த பின்னர் ஏமாறமாட்டீர்கள்… ஆனால் பல அப்பாவிகள் ஏமாந்துவிடுவார்கள்…

கனடா நாட்டிற்கு மக்களை அனுப்புவதாக பாரிய பண மோசடியில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் எமது செய்திச் சேவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

Canada next மற்றும் canada tamil எனும் இரு முகப்புத்தகங்களினுடாக போலியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவரும் சிலர் அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிப்பது மட்டுமின்றி தற்கொலைக்கு தூண்டிய சம்பவங்களும் பல இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒருவர் எமக்கு வழங்கிய முறைப்பாட்டை இங்கே இணைத்துள்ளோம்.

இலவச கனடா விசா என்று பணத்தை வேண்டி ஏமாற்றி கொண்டு இருக்கின்றாா்கள். நானும் இதை நம்பி அவா்களுடைய கனடா வைபா் இலக்கத்தில் கதைத்து ஒரு தொகுதி பணத்தை இலங்கையில் உள்ள நபரின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிட்டேன்.

நாள்கள் செல்ல செல்ல விசா வரவில்லை பணத்தை திருப்பி தர சொன்ன போது பயமுறுதி கதைத்தாா் .

உடனே இலங்கயைில் உள்ள நான் பணத்தை வைப்பிலிட்ட நபரை தேடி பிடித்து பணத்தை கேட்டோம்.

அதற்கு அவா் சொன்னது உங்களை விசாக்கு கொடுத்த என்ட நண்பனுக்கு தான் அந்த பணத்தை கொடுத்தம் என்டு.

நாங்கள் சொன்னம் இந்த பணத்துக்கு நீங்கள் தான் பொறுப்பு திருப்பி தரனும் என்டு.

அதற்கு பிறகு கனடா நபா் அழைத்தா் அவா்களை தொத்தரவு செய்ய வேண்டாம் நாம் பணம் தரன் என்டு.

சில நாள்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து பணம் போடுவது போலியான பணமாற்றத்தில் அனுப்பிய சீட்டை ஒன்றை எனக்கு அனுப்பினா்.

நான் அதை வங்கியில் கொண்டு போனேன் அவா்கள் சொன்னா்கள் இதுக்கு பணம் வரவில்லை என்டு.

நான் அவரிடம் இப்பிடி சொன்னன் அவா் கொஞ்சம் காத்திருக்க சொன்னாா்.

வரும் என்டு இருந்த நான் அந்த சிலிப்பில் பண வைத்தவரின் பெயரில் இருந்து அவரை முகப்புத்தகத்தின் ஊடாக கேட்ட போது அவா் சொன்னாா் இது நான் வேறு ஒரு நபருக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பினேன் என்டு அதை உங்களுக்கு எடிட் பண்ணி போட்டிருக்கிறாா் என்டு.

இவ்வாறான எமாற்று வேலை தொடர்பாக நான் கனடா நபருக்கு பேசிய போது அப்ப தான் அவா் சொன்னாா் நாங்கள் hacker உங்கள் documents எங்களிடம் இருக்கு தப்ப பயன்படுத்திடுவம் என்டு.

நான் பேசிட்டு இலங்கையில் உள்ள நபரை தொத்தரவு செய்து ஒரு தொகுதி பணத்தை வேண்டிட்டன் மிகுதி இல்ல.

தயவு செய்து இதனை எல்லோருக்கும் தெரிய படுத்துங்கள் கனடா அரசாங்கம் இலவச கனடிய விசா என்று ஒண்டும் வழங்கவில்லை.

இவா்கள் போலியான முகநூல் தொடங்கி பொய் சொல்லி ஏமாற்றுகிறாா்கள். இதனை மக்களுக்கு தெரிய படுத்துக்கள் அவா்களை காப்பாற்றுகள்.