அகதிகள் மீது வன்முறை! - அரசை கண்டிக்கும் மனித உரிமை ஆணைக்குழு. | பிரான்ஸ்.

ஆவணங்கள் இல்லாத அகதிகள் மீது முன் எப்போதும் இல்லாத அளவு வன்முறையை பிரயோகிப்பதாக அரசு மீது மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் பா-து-கலேயில் இருந்த அகதிகள் மீது பல தடவைகள் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு, அங்கிருந்த 10,000 அகதிகளை வெவ்வேறு பிராந்தியங்களுக்கு அரசு அனுப்பி வைத்ததோடு, அகதி முகாமையும் முற்றாக தகர்த்திருந்தது. அதில் இருந்து அகதிகளை மிக மோசமாக பிரெஞ்சு அரசு நடத்தி வருவதாகவும், அகதிகளை 'மறைத்து' வைக்க அரசு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அகதிகளுக்கான உணவு, சுத்தமான குடிநீர், குளியலறை, தங்குமிடம் போன்ற வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதோடு, அகதிகள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களும் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, தன்ணீர் பாய்ச்சியும் அகதிகள் மீது வன்முறைகள் பிரயோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.